ஏழைகளுக்கு குரல் கொடுத்த அதிரை மக்கள் - விலை உயர்வை கைவிட்ட டீக்கடைகள்

Editorial
0

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி பேருந்து நிலையம் அருகில், சில தேனீர் கடைகளில் விற்கப்படும் உணவுகளின் விலை (டீ-12, காபி-15, பலகாரம்-08)வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டது.

இது குறித்து, சமூக வலைத்தளங்களில் பல அதிரை வாசிகள் தங்களின் கண்டனக் குரலை எழுப்பினர். ஏழை, நடுத்தர மக்களின் முக்கிய உணவாகக் கருதப்படும் தேனீருக்கு கூடுதல் விலை ஏன் தர வேண்டும் என்று பொங்கி எழுந்தனர்.

விளம்பரம்:
இது தொடர்பாக,புதிதாகப் பொறுப்பேற்றுள்ள
நகராட்சித் தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள்,கட்டிட உரிமையாளர்கள்
சம்பந்தப்பட்ட டீக்கடை உரிமையாளர்களை அழைத்து, தங்களது அதிரடி  எதிர்ப்புகளை அன்போடு தெரிவித்தனர்.

வேறு வழியில்லாமல் அன்பான மிரட்டலுக்கு, அவர்கள் அடி பணிந்தனர். பணப்புழக்கம் கணிசமாக உள்ள அதிரையர்கள், சாமானிய மக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு,சாதி,மத பேதமின்றி தங்களின் எதிர்ப்பின் மூலம்
விலை ஏற்றத்தைக் குறைத்தது, உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

எனக்குத் தெரிந்தவரை கடைகளில் ஒரு பொருள் விலை ஏறினால் மீண்டும் குறைப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதேபோல், செல்வந்தர்கள், தலைவர்கள் யாரும் இந்த விலைக் குறைப்பில்  தலையிடுவதும் இல்லை.

ஆம், இந்த அதிரைவாசிகளின் அதிரடியை, சமூகப் பொறுப்பைப் பாராட்டித் தான் ஆக வேண்டும்.

கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...