வஃபாத் அறிவிப்பு - மேலத்தெரு சுபைதா அம்மாள்

மேலத்தெரு சர்க்கரை வீட்டைச் சேர்ந்த (மர்ஹூம்)  முஹம்மது மின்னார் அவர்களின் மகளும், ஒரத்தநாட்டை சேர்ந்த (மர்ஹூம்) முஹம்மது  உசேன் அவர்களின் மனைவியும் 

 (மர்ஹூம்) ஹயாதுல்லாஹ்  (மர்ஹூம்) குழந்தை சேக்காதி இவர்களின் சகோதரியும் முஹமது சேக்காதி அவர்களின் தாயாரும் ஒப்பு (எ) முஹம்மது மஸ்தான் அவர்களின் மாமியாரும் அசாருதீன் அவர்களின் உம்மம்மாவும் ஜாபிர் உசேன் அவர்களின் வாப்புச்சியுமாகிய சுபைதா அம்மாள் அவர்கள் நேற்று இரவு 9 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள் 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து

 ஜ‌ன்ன‌துல்_பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் *ஸப்ரன் ஜமீலா*’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்வோம்.

தகவல் : TIYA

Post a Comment

0 Comments