அதிரைக்கு புதிய நகராட்சி அலுவலகம் வேண்டுமா? - மக்கள் அளித்த முடிவு இதுதான்! பிறை குரல் Results





புதிய நகராட்சி அலுவலகம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று மாலை 4.00 மணிக்கு அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சி மற்றும் ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் சாமானிய மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க வேண்டி அதிரை பிறை சார்பில் "அதிராம்பட்டினத்துக்கு தற்போது புதிய நகராட்சி அலுவலகம் அவசியமானதா?" என்ற கேள்வியை முன்வைத்து வாக்கெடுப்பு ஒன்றை இணையதளம் வாயிலாக நடத்தியது. 

அதில் இல்லை என்று 60.78% பேரும், ஆம் என்று 39.22% பேரும் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் பெருவாரியான மக்கள் புதிய நகராட்சி அலுவலகம் வேண்டாம் என்றே கருதுவது உறுதியாகிறது.


Post a Comment

0 Comments