அதிரை ரயில்வே கேட் அருகே புதிய நகராட்சி அலுவலகம் - கூட்டத்தில் முடிவு

Editorial
0


புதிய நகராட்சி அலுவலகம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் கூட்டாக அழைப்பு விடுத்தனர்

அதன் அடிப்படையில் இன்று மாலை 4.00 மணிக்கு அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக, அதிமுக, SDPI, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, மமக, முஸ்லிம் லீக், அனைத்து முஹல்லாக்களின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
 இந்த கூட்டத்தில் பேசிய நகராட்சி துணைத்தலைவர் குணசேகரன், "அதிராம்பட்டினத்தில் நகராட்சி அலுவலகம் அமைப்பதற்கு அரசு நிலங்கள் இல்லை. மத்திய அரசு நிலம் மட்டுமே உள்ளது. இதற்காக மூன்றரை கோடி ரூபாயையும் அரசு ஒதுக்கியுள்ளது. ஒன்றரை கோடி ரூபாய் நமது நகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்டு ₹5 கோடி மதிப்பில் அலுவலகம் கட்ட இருக்கிறோம். அரசு உடனடியாக திட்டத்தை தொடங்காவிட்டால் கொடுத்த நிதியை பெற்றுக்கொள்வதுடன் புதிய அரசு கட்டிடங்கள் அமைவதும் சிக்கலாகிவிடும். எனவே 
தனியார் முன் வந்து நிலத்தை விற்க முயல வேண்டும்." என்று கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்தை முன் வைத்தனர். குறிப்பாக அதிரை அல் அமீன் பள்ளி தலைவர் குலோப்ஜான் அன்சாரி அவர்கள், பழைய இமாம் ஷாபி பள்ளி வளாகத்தை கேட்க வேண்டியதுதானே என்று தெரிவித்தார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் பிச்சை, "அதிரை நகராட்சியுடன் மற்ற கிராமங்களையும் சேர்த்து இருந்தால் இந்த நில பிரச்சனை வந்திருக்காது. ஓட்டு போய்விடும் என்று குறுகிய மனப்பான்மையோடு முடிவெடுத்ததால் 
இப்போது நிலப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.

இதில் கலந்துகொண்ட அனைத்து முஹல்லா தலைவர் பி.எம்.கே.தாஜுத்தீன் அதிரை ECR சாலை ரயில்வே கேட் அருகே உள்ள தனது நிலத்தை நகராட்சி அலுவலகத்துக்காக விற்க முன்வந்தார்.
பின்னர் பேசிய சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது தம்பி, அனைத்து "கிராமங்களையும் நகராட்சியோடு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த இடத்தில் நிலம் தேவையோ அந்த இடத்தை மட்டும் சேர்க்கலாம்." என்றார்.

ரயில்வே கேட் அருகே நகராட்சி அலுவலகம் அமைக்க SDPI, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து அந்த நிலத்தில் நகராட்சி அலுவலகம் அமைக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...