முத்துப்பேட்டை தாலுக்காவாக அறிவிக்கப்படும் என அமைச்சர் உறுதி.. அப்போ அதிராம்பட்டினம்?

Editorial
0
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை தனி தாலுக்காவாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார் என்றும் ஆனால் இதுவரை அது நடைமுறைப் படுத்தப்படவில்லை எனவும் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தெரிவித்தார். இதனால் முத்துப்பேட்டையை தனி தாலுக்காவாக மாற்றும் நடவடிக்கைக்கு இந்த அரசு ஆவணம் செய்யுமா என வினவினார்.
அதற்கு பதிலளித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்த பின்னர் முத்துப்பேட்டை தாலுக்காவாக செயல்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் தமிழகத்தில் புதிய தாலுக்கா ஒன்று உதயமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி அறிவித்த திட்டம் என்பதால் எவ்வித மறுப்பும் பேசாமல் சட்டமன்றக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு முத்துப்பேட்டையை தனி தாலுக்காவாக செயல்படுத்துவோம் என பதிலளித்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.

முத்துப்பேட்டைக்கு அருகாமையில் இருக்கும் தஞ்சை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட நமது அதிராம்பட்டினம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக தாலுக்கா இருந்து வருகிறது. ஆனால், மக்கள் எதிர்பார்க்காத வகையில் நகராட்சியாக அறிவித்துவிட்டு இன்னும் தாலுக்காவாக அறிவிக்காமல் இருக்கிறது தமிழ்நாடு அரசு.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...