அதிரை அருகே பெரும் பரபரப்பு... மூட்டை மூட்டையாக கடலில் மிதந்து வந்த 160 கிலோ கஞ்சா

அதிராம்பட்டினம்: ஏரிப்புறக்கரையைச் சேர்ந்த மீனவர் சோமசுந்தரம் இன்று அதிகாலை 7 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது படகு அருகே 5 மூட்டைகள் தண்ணீரில் மிதந்துள்ளன. அந்த மூட்டைகளை தனது படகில் ஏற்றிக்கொண்டு மீனவர் சோமசுந்தரம் அதிராம்பட்டினம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மூட்டைகளை மீனவர் கரைக்கு கொண்டு வந்தார். உடனடியாக நாகப்பட்டினம் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினர் உதவியுடன் கஞ்சா மூட்டைகளை கைப்பற்றி அதிராம்பட்டினம் கடலோர காவல்படை அலுவலகத்துக்கு கொண்டு வந்து சோதனை நடத்தினர். 

கைப்பற்றப்பட்ட கஞ்சா 160 கிலோ எடையும், ரூ.25 லட்சம் மதிப்பும் இருக்கும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments