அதிரைக்கு இப்போது என்ன தேவை? - வைரலாகும் வாட்ஸ் அப் பதிவு

Editorial
3
புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிரை நகராட்சி நிர்வாகத்துக்கு பெயர் தெரியாத நபர் எழுதி இருக்கும் நியாயமான கோரிக்கை தற்போது வாட்ஸ் அப் குழுக்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

இதனை பலரும் வரவேற்றுள்ளனர். அந்த பதிவில் "புதிய நகராட்சி கட்டி பந்தாவாகவும், பெருமையாகவும் ஊரை வலம் வரலாம் என்று மட்டும் நினைக்காது ஊரின் நீண்ட கால கோரிக்கையான பொது விளையாட்டு மைதானத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 

மழை காலங்களில் தாழ்வான பகுதி மக்களின் அல்லல்களையும், அவலங்களையும் கருத்தில் கொண்டு சாக்கடை வீட்டினுள் புகாமல் இப்பொழுதே சமயோசிதமாக திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

ஒதுக்கப்பட்ட 5 கோடிகளை தரமான கட்டிடம் கட்டி முடிக்க ஒதுக்கப்பட வேண்டும்.

நமதூரில் அன்றாடம் எல்லாத் தெருகளிலிருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகளை இயந்திரங்கள் மூலம் மறுசுழற்சி செய்து உரம் போன்றவற்றிற்கு பயன்படுத்த மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

ஊரின் பொது மருத்துவமனை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.

வறட்சியான இக்கோடை காலத்தில் ஊரின் எல்லாக்குளம், குட்டைகளும் புதிய நகராட்சி நிர்வாகத்தால் இயந்திரங்கள் மூலம் தூர் வாரப்பட்டு குளம் குட்டைகள் நிரம்பி ஊரின் நிலத்தடி நீர் மேம்பட இப்பொழுதே திட்டமிட வேண்டும். (சும்மா தெரு கான்களை மட்டும் அள்ளி அள்ளி வெளியில் மலை போல் குவித்து வைத்து விட்டு அதை பேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் அப்டேட் செய்து விட்டு தன் சோலி/கடமை முடிந்து விட்டதாக எண்ணி ஒதுங்கிக்கொள்ளக்கூடாது)

ஆண்கள் இல்லா வீடுகளில் பெண்ளுக்கு அரசு மூலம் வர வேண்டிய சலுகைகள், உதவித்தொகைகள், ஆவணங்கள் பெற்றுத்தர தேவையான உதவிகள் எவ்வித பணப்பலாபலன்களும் அவர்களிடம் எதிர்பார்க்காது கவுன்சிலர்கள் முன்னின்று செய்து தர வேண்டும்.

இது போல இன்னும் எத்தனையோ நற்பணிகள் செய்து இறைவனுக்கும் மற்றும் தெரு ஊர்வாசிகளுக்கும் உவப்பானவர்களாக ஆக அவர்களுக்கு இது ஓர் நல்ல வாய்ப்பாக கருதி பணி செய்து ஊரும், மக்களும் மேம்பட பாடுபட வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

3Comments
 1. பாதால சாக்கடை திட்டம்
  கால்நடை மருத்துவம்

  ReplyDelete
 2. வட நாட்டினருக்கு வீடுவாடகைகொடுப்பதை நிருத்த வேண்டும், அவர்களுக்கு கடைவாடகைக்கு கொடுப்பது, வீடு நிலங்களை விர்பதை தடுக்க வேண்டும், ஏனென்றால் இதனால் பெறும் பாதிக்கப்படுவது உள்ளூர் பலதரப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள்

  ReplyDelete
 3. தற்பொழுதுள்ள இந்த அரசினை கொண்டு நமதூரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த வேண்டும்
  1.பழைய கட்டிடங்கள் புதிப்பிக்கபடவேண்டும்.
  2.பற்றாக்குறையான ஆசிரியர்கள் உள்ள பள்ளிக்கூடத்திற்கு போதுமான ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இவை நகராட்சி முக்கிய பணியாகும்.
  3ஊரின் மக்கள்தொகை யை கணக்கிட்டு பொது நூலகம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
  4.தனியார்பள்ளிகளின் கல்வி கட்டணம் குறித்து நகராட்சி கவனத்திற்கு கொண்டு வருவது
  5. பள்ளிகூடம் வேலை நேரத்தில் காலையிலும் மாலையிலும் போக்குவரத்து உள்ளூர் எல்லையில் வேகக்கட்டுப்பாடு கொண்டு வரவேண்டும்

  ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...