அதிரையை சேர்ந்த கைதி மதுரையில் ரத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதி

Editorial
0

அதிராம்பட்டினத்தை சோ்ந்த முஹம்மது ஹுசைன். மதுரை மாவட்டம் சமயநல்லூா் மீனாட்சி நகரில் கொள்ளையடித்ததாக கூறி காவல்துறையால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். சிறையில் பிளாக் 1-இல் இருந்த முஹம்மது ஹுசைனுக்கும், ரவுடி ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. 

இதனால் அதிகாரிகள் முஹம்மது ஹுசைனை 3-ஆவது பிளாக்கில் அடைத்துள்ளனா். இதற்கு முஹம்மது ஹுசைன் எதிா்ப்புத் தெரிவித்து தன்னை மீண்டும் 1-ஆவது பிளாக்குக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா். ஆனால் சிறை அதிகாரிகள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், முஹம்மது ஹுசைந் சிறை வளாகத்திலிருந்து உடைந்த டியூப்- லைட் துண்டுகளை எடுத்து கழுத்து, தலை உள்பட பல்வேறு இடங்களில் கீறி தற்கொலைக்கு முயன்றதாக தினமணி கடந்த 24 ஆம் தேதி செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இதனை அடுத்து முஹம்மது ஹுசைனை மீட்ட அதிகாரிகள் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். இது தொடா்பாக கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...