அதிரையில் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைகோரி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிய SDPI

அதிரையில் நீதிமன்ற வழிகாட்டுதல் படியும் சட்டப்பிரிவு 161 ன் படியும் அனைத்து முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் கருணையோடு உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி SDPI கட்சி தமிழ்நாடு முழுவதும் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதும் பிரச்சார இயக்கத்தை நடத்தியது.
அதன் ஒருபகுதியாக அதிரையிலும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் இளைஞர்களிடம் கையெழுத்து பெற்றப்பட்டது. இதில் ஏராளமான மாற்றுமத சகோதரர்களும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு விடுதலை வேண்டி கையெழுத்திட்டனர். 
இந்த கடிதங்களை முதலமைச்சரின் அலுவலக முகவரிக்கு அதிரை SDPI கட்சி நிர்வாகிகள் அதிரை தபால் நிலையம் மூலமாக அனுப்பி வைத்தனர்.

Post a Comment

0 Comments