ராஜினாமா பன்னிட்டு என்ன நேர்ல மீட் பன்னுங்க.. அதிரை குணசேகரனுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

Editorial
0
அதிரை நகராட்சி துணைத் தலைவருக்கான போட்டியாளர் என திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் தில் நவாஸ் பேகத்தை எதிர்த்து போட்டியிட்ட நகர திமுக தலைவர் இராம.குணசேகரன் வென்ற நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ""கடமை - கண்ணியம் - கட்டுபாடு"தான் கழகத்தவருக்கு அழகு!

அதனை மீறி மறைமுகத் தேர்தலில் சாதித்துவிட்டதாகச் சிலர் நினைக்கலாம்; குற்ற உணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமை உணர்வு எக்காலத்திலும் குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

தோழமைக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாகப் பொறுப்பை விட்டு விலக வேண்டும்!

விலகாவிட்டால் கழக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார்கள்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள்!" என கண்டித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...