அதிரையில் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு சமூக நலப்பணிகளை செய்து வருகின்றனர். இதனால் வழக்குகளும் கைதும் சிறையுமே பல நேரங்களில் அவர்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது.
ஆனால் அதிரையில் சில ஆண்டுகளாக ஒருவர் தன் பெயருக்கு முன்னால் சமூக ஆர்வலர் பட்டத்தை சேர்த்து கொண்டு பத்திரிகையாளர் போன்று தன்னை காட்டிக்கொண்டு தனக்கு மட்டுமே சமூக நலனில் அக்கறை இருப்பதை போல் தம்பட்டம் அடித்து வருகிறார். இரு நபர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டால் அந்த அவர்களை தனித்தனியாக சந்தித்து சாதகமாக பேசுவதோடு என்னால்தான் இந்த பிரச்சினையை முடிக்க முடியும் என்றும் காவல்துறை முதல் அரசு பதவியில் இருப்பவர்கள் வரை தன் பேச்சை கேட்பார்கள் என்றும் கூறி மறைமுகமாக பணத்தை கேட்பதாக கூறுகின்றனர் தொடக்கத்தில் இவரை நம்பியவர்கள். இருவருக்கிடையே எளிதில் முடிய வேண்டிய பிரச்சினையை முடிக்கவிடாமல் தனது வாழ்வாதாரத்திற்கு நங்கூரம் போட்டுவிடுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி யாரும் கேட்கபோனால் காவல்துறையில் புகாரளித்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் நமதூரிலுள்ள ஒரு பள்ளிக்கூட பிரச்சினையில் இவர் தலையிட்டு அரசு அதிகாரிகளுக்கு என லஞ்சமாக சில தொகையை கேட்டுள்ளதாகவும் விழித்து கொண்ட நிர்வாகம் நாங்கள் நீதிமன்ற வாயிலாக பார்த்துக்கொள்கிறோம் என சொன்னதால் இவர் அதை கைவிட்டதாகவும் நம்பத்தகுந்த நபர்கள் கூறியுள்ளனர்.
அதிரையில் ஒருவருக்கு எதிராக ஒருவரை கொம்பு சீவிவிடும் சமூக நலன் தம்பட்டக்காரரின் தொழில் என்னவென்று கேட்டால் உடன் இருப்பவர்களுக்கே தெரியாது. பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டால் அனைவரும் வார்த்தையில் முடித்து கொள்கிறார்கள் "அது கட்டப்பஞ்சாயத்துங்க" என்று.
தனிநபர்களிடம் தனது நாரதர் வித்தையை காட்டியவர் தற்போது தேர்தல் நேரத்தில் அதிரையில் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களிடையே கொம்பு சீவும் வேலையையும் வேட்பாளர்களிடம் பணம் பறிக்கும் வேலையை செய்து வருவதாகவும் கூறுகின்றனர். அதிரையில் இயங்கும் இயக்கங்கள் மற்றும் கட்சிகள் விழித்துக்கொள்ள வேண்டும்.
இந்த சமூக நல வியாபாரியிடம் இனிமேலாவது அதிரையர்கள் ஏமாறாமல் உஷாராக வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் பொறுமுகிறார்கள். பொறுப்பற்ற பொதுநலமற்ற சுயநலன் உடையவரை புறக்கணிப்போம்.
1 Comments
இது செய்தியா கிசுகிசுவா பெயர் குறிப்பிடாமல் என்ன செய்தி இது
ReplyDelete