அதிரையில் திரளாக வந்த மாணவர்கள்.. சிறப்பாக நடைபெற்ற ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பின் கல்வி வழிகாட்டி முகாம்

Editorial
0
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க நூற்றாண்டு வளாகத்தில் நடைபெற்றது

இன்று (ஏப்ரல் 29ஆம் தேதி சனிக்கிழமை) காலை 9:30 மணியளவில் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் மாபெரும் கல்வி வழிகாட்டுதல் முகாம் ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர்  M.A.முகம்மது சாலிஹ் தலைமையில் நடைபெற்றது.

A.நவாஸ் அகமது அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு தலைவர் Z.முஹம்மது தம்பி அவர்கள் அறிமுக உரை ஆற்றினார்.

முனைவர். F. சாகுல் ஹமீது (திருவல்லிக்கேணி முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி, சென்னை) 
M. சசிகுமார் 
(தலைமைச் செயலக பிரிவு அலுவலர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) ஆகியோர் மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டுதல்களுடன் சிறப்புரை ஆற்றினர் 

இதில்ல் 8ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள், பெண்கள் கலந்துகொண்டனர். அரங்கம் நிறைந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவர்கள் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...