அதிரை நகராட்சியை முற்றுகையிட்டு ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகள் போராட்டம்

Editorial
1
அதிராம்பட்டினம் பேரூராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிரை நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி வார்டு மறுவரையறை நடந்திருப்பதாகவும் விடுமுறை நாளன்று, நகராட்சி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதாகவும் கூறி கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி நகராட்சி அலுவககத்தை முற்றுகையிட்டு SDPI கட்சி போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட பகுதிகளில் அநீதமான முறையில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளை கண்டித்து இன்று காலை 10 மணியளவில் அதிராம்பட்டினம் நகராட்சி முன் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஈ.சி.ஆர். சாலை பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Post a Comment

1Comments
  1. Slot Machines - Sands Casino
    There are also many slots games 우리카지노 on the floor. The slot machines 12bet at Sands Casino. Jackpot! Jackpot! Jackpots! Progressive Jackpots! Casino Slots! Jackpot! 샌즈카지노

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...