அதிரை நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

Editorial
0
அதிராம்பட்டினம் பேரூராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிரை நகராட்சியில் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி வார்டு மறுவரையறை நடந்திருப்பதாகவும் விடுமுறை நாளன்று, நகராட்சி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதாகவும் கூறி கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி நகராட்சி அலுவககத்தை முற்றுகையிட்டு SDPI கட்சி போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட பகுதிகளில் அநீதமான முறையில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளை கண்டித்து வரும் இன்று காலை 10 மணிக்கு அதிராம்பட்டினம் நகராட்சி முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் மற்றும் பொது வேட்பாளர்கள் போட்டியிடும் நகராட்சிகள் பட்டியல் நேற்று முறையாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதன்படி  அதிராம்பட்டினம், ராணிப்பேட்டை, கூத்தாநல்லூர், ராசிபுரம், குன்னூர், திருவாரூர், ஊட்டி, முசிறி, திருத்துறைப்பூண்டி, செங்கோட்டை, பள்ளப்பட்டி, நெல்லிக்குப்பம், பேரணாம்பட்டு, சீர்காழி, பழனி, வாணியம்பாடி, மேட்டுப்பாளையம், ஆத்தூர், அரக்கோணம், செங்கல்பட்டு, மதுராந்தகம், போடிநாயக்கனூர், குளித்தலை, திருநின்றவூர், கிருஷ்ணகிரி, அரியலூர், திருச்செங்கோடு, ராஜபாளையம், ஆற்காடு, அருப்புக்கோட்டை, திருமங்கலம், பெரியகுளம். ஆகிய பெண்கள் போட்டியிடும் நகராட்சிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...