அதிரை நகராட்சியில் SDPI போட்டியிடும் முதற்கட்ட வார்டுகள் அறிவிப்பு

Editorial
0
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று முதல் பிப்ரவரி 4-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

இந்த நிலையில் புதிதாக நகராட்சி என தரம் உயர்த்தப்பட அதிராம்பட்டினத்திலும் தேர்தல் களம் சூடுபிடித்து இருக்கிறது. திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும் தனித்துப் போட்டியிடும் SDPI கட்சி இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 27 வார்டுகளை கொண்ட அதிரையில் 20 வார்டுகளில் அக்கட்சி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் அதிரையில் SDPI போட்டியிடும் முதற்கட்ட வார்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2, 6, 7, 8, 9, 12, 13, 19, 20, 21 ஆகிய 10 வார்டுகளில் அந்த கட்சி போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...