அதிரை நோக்கி வந்த தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூல்... FC முடிந்ததும் அம்பலம் - சென்னையில் பிடித்த அதிகாரிகள்

Editorial
0
தீபாவளியை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அண்மையில் எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில், நேற்று சென்னை மண்ணடியில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தை சென்னை அசோக் நகர் அருகே இரவு 9:30 மணியளவில் நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதா என அதிகாரிகள் விசாரித்தனர். இதில் சோதனையில் அதிக வசூல் செய்யப்பட்டது உறுதியானதையடுத்து பேருந்துக்கு அபராதம் விதித்தனர். 

மேலும் பேருந்தின் ஆவணங்களை ஆராய்ந்த அதிகாரிகள், பேருந்தை
இயக்குவதற்கான FC எனப்படும் தகுதிச்சான்றிதழ் (FITNESS CERTIFICATE) முடிந்து விட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பாதுகாப்பு கருதி தனியார் பேருந்தில் பயணித்த அதிரை பயணிகள் அனைவரையும் அரசு பேருந்துக்கு மாற்றப்பட்டனர். இதனால் ஒரே இடத்தில் 2 மணி மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் அதிரையிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டிய தனியார் பேருந்து சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக Redbus செயலியில் இன்று பயணம் செய்ய டிக்கெட் புக்கிங் செய்தவர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

தகவல்: அஹமது ஜுபைர்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...