அதிரை முத்தம்மாள் தெருவில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்... கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து ECR சாலையில் மறியல்

Editorial
0
வட கிழக்கு பருவழை கடந்த 26ம் தொடங்கிய நிலையில் அதிரை உட்பட்ட தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. அதிரையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று அதிக மழை கொட்டித்தீர்த்தது. நள்ளிரவு பெய்த மழை அதிகாலை வரை தொடர்ந்து வருகிறது. அதிரையில் மட்டும் நேற்று 134 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித்தீர்த்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக அதிரையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக கிழக்கு கடற்கரைச் சாலையோரம் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வசிக்கும் முத்தம்மாள் தெருவில் சிறு மழை பெய்தால் கூட வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. 


நள்ளிரவு கொட்டித்தீர்த்த மழையால் அருகில் இருந்த குளத்தில் உடைப்பு ஏற்பட்டு முத்தம்மாள் தெருவில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தீபாவளி கொண்டாட்டத்துக்கு தயாராகி வந்த மக்கள், வீடுகளுக்குள் பெருமழை வெள்ளம் புகுந்தத தூக்கத்தை இழந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதுவரை அதிராம்பட்டினம் நகராட்சியிலிருந்து யாரும் அப்பகுதிக்கு உதவிக்காக செல்லவில்லை எனக்கூறி ஈ.சி.ஆர். சாலையை மறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...