அதிரை திருமணத்தில் நகை திருட்டா? பறிகொடுத்தவர்கள் வேண்டுகோள்

அதிராம்பட்டினத்தில் கடந்த 24-10-2021, ஞாயிற்றுக்கிழமை அன்று வெற்றிலைக்காரத் தெருவில் நடந்த திருமணத்திற்கு வருகை புரிந்த பிலால் நகரை சேர்ந்த ஒரு பெண் அணிந்திருந்த தங்க நகை (Necklace) காணாமல் போயுள்ளது. நகையை பறிகொடுத்தவர்கள் இதுகுறித்து விசாரித்ததில் ஒரு பெண் கீழே கிடந்த நகையை கண்டெடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது.

நகையை எடுத்த பெண் யாரென்று கண்டுபிடித்தவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். கீழே கிடந்த நகையை யாருடையது என தான் விசாரித்ததாகவும் அப்போது அருகிலிருந்த வேறு ஒரு பெண்  தன்னுடைய நகை தான் என்று கேட்டு வாங்கி சென்றதாகவும், அவரிடம் விபரம் கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நகையை வாங்கிச் சென்ற அந்தப் பெண்  அல்லாஹ்விற்கு பயந்து,  தங்கள் எண்ணை தொடர்பு கொண்டோ, நேரிலோ அல்லது, பள்ளிவாசல் நிர்வாகத்திடமோ தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

எங்கள் தொடர்புக்கு: 
ஹுஸைன் - 8807560664
சிராஜ் - 7092614880

Post a Comment

0 Comments