அதிரை அரசு மருத்துவமனையில் ஆண்களுடன் பெண்ணுக்கும் ஒரே இடத்தில் ஊசி போடுவதால் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலான நோயாளிகளுக்கு இடுப்பு பகுதியில்தான் ஊசி செலுத்தப்படுகிறது.
அப்படியிருக்க ஆண், பெண் இருவரும் ஊசி போடுவதற்கு தன் ஆடையை திறந்தவெளியில் விலக்கி காட்ட வேண்டும்.
இதனால் மருத்துவரை பார்த்து மாத்திரை வாங்கிவிட்டு ஊசி போடாமலே சிலர் சென்றுவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களின் நிலை பரிதாபம். வெட்கத்தால் கூனி குறுகும் நிலை உள்ளது. இதில் இன்னொரு கொடூரம் என்னவென்றால் பெண்களின் வரிசைக்கு அருகே தான் மருத்துவமனை கழிவறை வாசலும் உள்ளது.
அரசு மருத்துமனையின் சலுகைகள், சிறப்பான சிகிச்சைகள் இருந்தால்கூட இதுபோன்ற அவலங்களலாலேயே மக்கள் தனியார் மருத்துவமனையை நாடுகிறார்கள். அது பணம் படைத்தவர்களுக்கு இலகுவாக கிடைக்கும். ஆனால்
வசதியற்ற மக்களின் நிலை????
தகவல் மற்றும் படம்: அதிரை உபயா
0 Comments