அதிரை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பேராசிரியர் அப்துல் காதர் எழுதிக்கொள்வது...

Editorial
1
அதிராம்பட்டினத்தின் பாரம்பரியமிக்க கால் பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகள் பற்றிய யுடியூப் பதிவு அதி அற்புதம். நமது ஊரைச் சார்ந்த ரெட் ஸ்டார் ரெக்ரியேஷன் க்ளப் (R S R C) அணி தமிழகம் முழுவதும் சென்று கால்பந்து விளையாட்டில் வெற்றிக் கொடி நாட்டி வந்துள்ள பழைய வரலாற்றையும் நமது இளைய தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். 

கோடை இடி காசிம் ,குல் முகம்மது ,கோல் கீப்பர் ஹாஜா , மின்னல் வீரர் என்று பாராட்டப் பட்ட ஜமால் ஹாஜியார், ஆகியோர் அதிரையின் கால்பந்து விளையாட்டு வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவர்கள். மஜ்ஃபா அப்துல் கஃபூர், OKM நைனா முகம்மது, மஜ்ஃபா ஜஃபருல்லா ஆகிய கால்பந்தாட்ட ஜாம்பவான்கள் இலங்கை அணிக்காக நியூஸிலாந்தை எதிர்த்து விளையாடி இலங்கையை வெற்றி பெறச்செய்த சிறப்பினைப் பெற்றவர்கள் இவர்களும் அதிரை R S R C யில் உருவானவர்களே. 

இத்தகைய சிறப்புக்களை இப்போதைய நமது இளம் தலைமுறை விளையாட்டு இளைஞர்களும் பெற்றுத்திகழ வேண்டும் என்பது என் பேரவா. இதற்கும் மேலே நமது இஸ்லாமிய இளைஞர்கள் IAS,IPS, IFS,IRS, போன்ற உயர் கல்வி கற்ற அதிகாரிகளாக வந்து நம் சமுதாயத்திற்குப் பெருமை சேற்க முயல வேண்டும்.

நமது ஊரில் கடந்த 65 ஆண்டுகளாக இயங்கி வரும் காதிர் மகைதீன் கல்லூயில் பல்வேறு கல்வித்துறைகளில் Ph. D வரை கல்வி பயில வாய்ப்புக்கள் உள்ளன இவ்வளவு இருந்தும் டாக்டர் பட்டம் பெறுவோர் மிக மிக குறைவு. 100 க்கும் அதிகமான பேராசிரியர்கள் பணியாற்றக்கூடிய நம் காதிர் மகைதீன் கல்லூரியில் ஆறு பேர் மட்டுமே அதிரை வாசிகள். இந்த அவல நிலை ஏன்? இளைஞர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டுமா இல்லையா?

விதை முளையாகி ,முளை ,செடியாகி மரமாகி மரம் பூத்து காய்த்து ,அக்காய் கனி ஆனபின்னர் அதை உண்டால்தான் அதன் சுவையும் பயனும் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஆனால் நமதூர் பெற்றோர்கள் மரம் பூத்துக்காய்க்கும் முன்னே பழம் பறிக்க விரும்புகிறார்கள். காரணம் பெண் பிள்ளைக்கு வீடு கட்ட பணம் வேண்டும், மகன் மேல் படிப்பு படிக்காவிட்டாலும் பரவாயில்லை என்று கருதி மகன் அரபு நாடு சென்று ஆடு மேய்ததாலும் சரி ஒட்டகம் மேய்த்தாலும் சரி, நமக்கு பணம் வந்தால் போதும் கருதி இளைஞர்களின் எதிர் காலத்தை இருள் அடையச்செய்து விட நம் இளைஞர்களும் வெளி நாட்டு ஆசை காரணமாக இதற்கு உடன்பட்டு சரி எனக் கூறி வெளி நாட்டுக்கு சென்று விடுகின்றனர். 

அரபு நாடுகளுக்குப்  பிழைக்கவந்த தமிழ் நாட்டு மக்களைவிட மலையாளிகள் ஆறு மடங்கு அதிகமாகப் பொருளீட்டுகிறார்கள் என்ற கணக்கு நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இதன் காரணம் மலையாளிகள் தொழில் ரீதியான உயர் கல்வி பயின்று வெளி நாடுகளில் உயர்பதவிகளில் அமர்ந்து உயர்ந்த ஊதியம் பெற்று வளமுடன் வாழ்கிறார்கள் என்பதே உண்மை. நாமும் ஏன் அப்படி உயர்வு பெறக்கூடாது என்ற கேள்வியும் சிந்தனையும் நம் இளைய சமுதாயத்தினரிடையேகிளர்ந்து எழவேண்டும். 

ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பது திருக்குறள். 

நம்முடைய எல்லா உயர்வுகளுக்கும் அடித்தளமாய் இருப்பது ஒழுக்கம் நிறைந்த வாழ்வே என்பதை யாரும் மறுக்க இயலாது.  தற்போது நம் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா மது போன்ற போதைப்பொருள்கள் சாதாரனமாகப் பழக்கத்தில் வந்துவிட்டது என்பதை கேள்விப்படும்போது நம் எதிர்கால முஸ்லிம் சமுதாயம் என்னாகுமோ  என்ற கவலை பெரியோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது. சென்ற வாரம் நமது ஊரில் நடத்தப்பட்ட போதைக்கு எதிரான இளைஞர்களின் ஆர்பாட்டம் மனதுக்கு கொஞ்சம் ஆறுதல் தருவதாக இருந்தது

சற்று நாம் சிந்திப்போம், போதைக்குப் பணம் தேவை என்பதாலும் போதை மருந்து வியாபாரம் செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற இருகாரணங்களால்தான் தெருவில், ஊரில் ,நாட்டில் திருட்டு ,கொலை, கற்பழிப்பு, கொள்ளை, மதக்கலவரங்கள் ஆகிய அனைத்தும் நடைபெறுகின்றன

நான் நம் சமுதாய இளைஞர்களை வேண்டுவது , நம்முடைய இஸ்லாம் வணக்கத்தைவிட ஒழுக்கத்தைத்தான் முதலில் கற்றுத்தருகிறது. பணிவு, அடக்கம், பொறுமை, பேராசை கொள்ளாதிருத்தல், பெற்றோரைப் பேணுதல், பெரியோரை மதித்து நடத்தல், பசித்தோர்க்கு உணவு அளித்தல், ஏழைகளுக்கு உதவி செய்தல் ஆகிய இவை அனைத்தும் நமது நபி அவர்கள் நமக்குக் கற்றுத்தந்த நல் ஒழுக்கங்கள். 

நமது சமுதாய இளைஞர்கள் இவற்றைப் பேணி நடந்தால் கல்வி நம்மைத் தேடி வரும் நம்மிடம் உயர் கல்வி வந்துவிட்டால் உயர் பதவிகள் நம்மைத் தேடி வரும், நமது தாய் தந்தையரின் கனவுகள் மெய்ப்படும், நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாக வலம் வருவீர்கள். 

என்ன இளையசமுதாய நண்பர்களே மிக நீளமாக அமந்துவிட்ட இந்த எழுத்து வடிவம் உங்களுக்கு போர் அடிக்கிறதா? என்னை மன்னித்து விடுங்கள். . பணி ஓய்வு பெற்று 13 ஆண்டுகளுக்குப் பின் ஒரு புதிய வகுப்பில் பாடம் நடத்திய உணர்வு எனக்கு..

நீங்கள் விரும்பினால் நமதூர் இளைர்களுக்கு ஷேர் செய்யுங்கள். 

என்றும் அன்புடன் பேரா. M. A. அபதுல் காதர்.

Post a Comment

1Comments
  1. Excellent and mind blowing content which is thoroughly highlighting the crisis faced by the current generation in a detailed as well as with so much concern by Former Principal of KM College Mr Abdul Khader..Hope the youth and elders take it seriously and act swiftly to bring our generation in the track as well as glorify our true champions who excelled in sports in those days who are truly inspiring personalities to the new generation...

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...