அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, ஆகஸ்டு 24-ம் தேதி நடைபெற்ற  நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கையின் போது,  நகராட்சி சார்பில் கொள்கை விளக்க கையேடு வெளியிடப்பட்டது. அப்போது உரையாற்றிய  அமைச்சர் கே.என் நேரு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாக விரிவாக்கம் செய்ய கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளதாக கூறி பல்வேறு பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில், தற்போது 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. 

அதன்படி, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருச்சி மாவட்டம் முசிறி, இலால்குடி, சேலம் மாவட்டம் தாரமங்கலம், இடங்கனசாலை, கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வடலூர், கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு கரூர் மாவட்டம் புகலூர், பள்ளப்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, திருநின்றவூர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர், மதுக்கரை, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ஆகிய 10 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments