அதிரை அரசு மருத்துவமனையில் பனை, பலா, அத்தி விதைகளை விதைத்த இளைஞர்கள்

Editorial
0
அதிராம்பட்டினத்தில் ADIRAI TREE PROJECT வாட்சாப் குழு செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் அதிரை குளம் மற்றும் ஏரி கரையில்  பனை விதை நடும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். 


செக்கடிக்குளம், ஆலடிக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பனை விதைகளை நட்ட இந்த குழுவினர் நேற்று அதிரை அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்கள் உதவியுடன் பனை, பலா, அத்தி விதைகளை நட்டனர். இதில் மருத்துவர் ஹாஜா முகைதீன் அவர்களும் கலந்துகொண்டு பனை விதை விதைத்தார்.

மற்ற மரங்களை விட பனை, பலா, அத்தி மரஙகள் தண்ணீர் ஊற்றாமல் அதுவாகவே வளரக்கூடியது என்றும், இயற்கைச் சூழலை காக்கக்கூடியது எனவும் அந்த குழுவினர் தெரிவிக்கின்றனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...