டெல்லி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சபியாவுக்கு நீதி கேட்டு அதிரையில் SDPI கண்டன ஆர்ப்பாட்டம்

Editorial
0
டெல்லியை சபியா என்ற  21 வயதான பெண் காவலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காணாமல் போன சபியா பரிதாபாத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 

போலீசார் விசாராணியிலும், பிரேத பரிசோதனை அறிக்கையிலும் வெளியான தகவல் ஒட்டுமொத்த இந்தியாவை அதிர வைத்துள்ளது. சம்பவம் நடந்த அன்று ஷபானாவை பணியில் இருந்த நிலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்தியுள்ளது.

பின்னர் சபியாவை அந்த கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து உடலில் சுமார் 50 இடங்களில் குத்தி கிழித்துள்ளனர். மேலும், அவரின் மார்பகங்களை கத்தியால் அறுத்து கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களின் ரகசியங்களை சபியா அறிந்ததால் படுகொலை செய்யப்பட்டதாகவும், ஆனால் போலீஸ் காதல் விவகாரத்தால் கொல்லப்பட்டதாக பொய்யான தகவலை சொல்லி வேறு ஒருவரை கைது செய்திருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உண்மை குற்றாவாளிகளை கைது செய்திட வலியுறுத்தி அதிரை பேருந்து நிலையத்தில், SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டு கொலையாளிகளை கைது செய்யவும், சபியாவுக்கு நீதி கிடைக்கவும் வலியுறுத்தி முழக்கஙகளை எழுப்பினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...