சென்னை பிராட்வேயிலிருந்து - அதிரைக்கு அரசு விரைவுப் பேருந்து சேவை தொடங்கப்படுமா?

Editorial
0
அதிராம்பட்டினத்தை சேர்ந்த மக்கள் பலர் வருவாய்க்காக வெளிநாடுகளில் வசித்தாலும் கணிசமான அளவு சென்னையிலும் தொழில் செய்துகொண்டோ, நிறுவனங்களில் பணிபுரிந்தோ வருகின்றனர். குறிப்பாக சென்னை மண்ணடி, சேத்துப்பட்டு, ஆயிரம் விளக்கு போன்ற பகுதிகளில் அதிரை மக்கள் நிறைந்த பல வீதிகள் உள்ளன.

ஆனால், இவர்கள் அதிரை - சென்னை இடையே செல்ல தனியார் பேருந்துகளை தவிர வேறு வழி இல்லை. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு திருவாரூர் - காரைக்குடி இடையே அதிரை வழியாக ரயில் போக்குவரத்து தொடங்கி இருக்கிறது. ஆனால், அது சென்னைக்கு எப்போது நீட்டிக்கப்படும் என்ற விபரம் நமக்கு மட்டுமல்ல இந்திய ரயில்வே துறைக்கே தெரியாது. முதலில் கேட் கீப்பர்களை நியமித்து பயண நேரத்தை குறைக்கிறார்களா? என்று பார்ப்போம்.

ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை அருகே வசிப்பவர்கள் கூட அதிரைக்கு வந்து செல்லும் SETC அரசு பேருந்தை பயன்படுத்தலாம். ஆனால், மண்ணடியில் வசிப்பவர்களுக்கு ஒரே கதி தனியார் பேருந்து தான். சீசன் நேரங்களில் தனியார் பேருந்துகள் எவ்வளவு கட்டணம் வசூலித்தாலும் அதை செலுத்தியே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

ஒரு வேளை கோயம்பேட்டுக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் பயணிக்க வேண்டும் என்றாலும் வேறு ஒரு நகரப்பேருந்தையோ அல்லது கால் டாக்சியையோ நாடி பேருந்து நிறுத்தம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மக்களின் இந்த சிரமங்களை தவிர்க்க கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு முன் சென்னையின் பிரதான பேருந்து நிலையமாக இருந்த பிராட்வேயில் இருந்து அதிரைக்கு அரசு விரைவு பேருந்தை இயக்கினால் பெருவாரியான மக்கள் பயனடைவார்கள்.

இதற்கு தமிழ்நாடு அரசு ஆவண செய்யுமா? அதிரை திமுகவினர் அழுத்தம் கொடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...