அதிரை அல் அமீன் பள்ளி எதிரே கட்டப்பட இருந்த அரசு கழிப்பிடத்தை மாற்று இடத்தில் கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

Editorial
0
அதிராம்பட்டிநம் பேரூராட்சியின் பொது கட்டண கழிப்பிடத்தை பேருந்து நிலையம் அருகே அல் அமீன் பள்ளிவாசல் எதிரே கட்டுவதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பள்ளிவாசலுக்கு வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கழிப்பிடத்தை மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று 26/8/21 ம்தேதி  வியாழக்கிழமை 11:00 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்தில் சுமூக பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. MMS அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன், காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் முன்னிலை வகித்தனர்.
இதில் ஏற்கனவே கட்டப்பட இருந்த இடமான அல்-அமீன் ஜாமிஆ பஸ் ஸ்டாண்ட் பள்ளிவாசல் பாதைக்கு பதிலாக டிராக்டர் செட் அருகில் கழிப்பிடம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...