அதிராம்பட்டினம் நகராட்சி - சட்டமன்றத்தில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் அதிக வருவாய் தரக்கூடிய பேரூராட்சியாக இருந்து வரும் அதிராம்பட்டினம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு நிலையில் இருந்து சிறப்பு நிலையாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்து இருப்பதாக கடந்த சில மாதம் அதிரை பிறையில் செய்தி வெளியிட்டிருந்தோம். 

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதுடன் மாநகராட்சி, நகராட்சி தர உயர்வு குறித்த அறிவிப்பும் வெளியானது.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் நகராசியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments