அதிரை சிட்னி அணியில் கிரிக்கெட் பயிற்சி பெற்ற சிறுவர்களுக்கு கோப்பை, பதக்கம் வழங்கி கவுரவிப்பு

Editorial
0
அதிரையில் பல ஆண்டுகளாக சிறுவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினாலும், பல்வேறு தொடர்களை நடத்துனாலும் நமதூரிலிருந்து மாநில அளவிலான அணிகளுக்கு செல்வதில்லை. இறுதியில் கிரிக்கெட் திறமையை மூட்டை கட்டிவிட்டு பொருளாதார தேவைக்காக வேறு பணிகளுக்கு சென்று விடுகின்றனர். 

இந்த நிலையை மாற்றும் வகையில் நமதூர் சிறுவர்களை இளம் வயதிலேயே தொழில்முறை போட்டிக்கு தயார்படுத்தும் முயற்சியில் அதிரை சிட்னி கிரிக்கெட் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.
இதற்காக தொழில்முறை விளையாட்டு வீரர்கள் விளையாடும் STITCH பந்தில் விளையாட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், நமதூர் சிறுவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் 16 வயதுக்கு உட்பட்டோருக்காக சிட்னி ப்ரீமியர் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் தொடரை நடத்தினர். இதற்காக சிட்னி அணி நடத்திய வலைப்பயிற்சியில், ஏராளமான சிறுவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து சிறப்பாக விளையாடினர். இன்று தொடர் முடிவடைந்த நிலையில், பங்கேற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள், பாராட்டு பதக்கங்களும் வழங்கி கவுரவித்தனர்.
இதுகுறித்து சிட்னி அணி தெரிவித்துள்ளதாவது, "அல்லாஹ்வின் உதவியால் பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து விளையாடிவரும் நமது சிட்னி  ASFCC மைதானத்தில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகின்றோம்.

வீட்டை விட்டு வெளியில் வராமல் பல சிறுவர்கள் கைபேசிக்குள் முடங்கி கிடக்கின்கிறார்கள். அவர்களை போல் இளைஞர்கள் முடங்கி விடாமல் உடலும், மனதும்  ஆரோக்கியமாக இருப்பதற்காகவும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டுமெனவும் நமது முஹல்லா இளைஞர்களை தயார்படுத்தி வருகிறது நமது அதிரை சிட்னி அணி. 

இதற்காக Stitch Ballல் வளைப்பயிற்சி, பயிற்சிப்போட்டி தொடங்கி சிறப்பான முறையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.நமக்கான தனி மைதானம் இல்லாதது நமது முஹல்லா இளைஞர்களுக்கு பெரும் தடையாக இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் நமது முஹல்லாவிற்கான மைதானம் அமைத்து தருவதாக நமது சங்க மூத்த பெரியவர்கள் வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். 
இன்ஷா அல்லாஹ் அவர்கள் எண்ணம் போல அனைத்தும் சிறப்பாக அமையும். நமது சிட்னி அணியும் அந்த மைதானத்தை கொண்டு பல சாதனைகள் புரியும். பயிற்சி போட்டிகளில் ஆர்வமாக பங்கேற்று விளையாடிய நமது முஹல்லா சிட்னி அணி Under 16 இளம் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இன்று (27.08.2021) சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இன்ஷா அல்லாஹ் வெற்றிகள் தொடரும்."

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...