அதிரை அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

Editorial
0

தஞ்சை மாவட்டத்துக்கான கொரோனா நோய் தடுப்பு பொறுப்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டு உள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து கொரோனா தடுப்புப்பணிகள், சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.

அந்த வகையில் இன்று அதிரை அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் வருகை தந்தார். அங்கு கொரோனா சோதனை நடைபெறும் இடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு நோய் தடுப்பு பணிகள், தடுப்பூசி விநியோகம் போன்றவை குறித்து அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்களிடம் வினவினார்.


இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை, அதிரை திமுக நகர செயலாளர் குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...