அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அதிரை பயணம் ரத்து

Editorial
0

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அதிரை, பட்டுக்கோட்டை, தஞ்சை அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்வதற்காக வருகை தர இருந்தார்.

இந்த நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா அவர்களின் மனைவி உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்ததை அடுத்து இன்று நடைபெறும் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அமைச்சர் சென்னை செல்ல இருப்பதால் அமைச்சரின் இனீஅய்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சர் அவர்கள் வேறொரு தினம் அதிரைக்கு வந்து ஆய்வு செய்வார் என்றும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் திமுக அதிரை நகர செயலாளர் ராம குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...