அமீரகம் (UAE) செல்ல இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு


இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்வதற்கான பயணத் தடை ஜூன் 30, ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிகாரப்பூர்வ விமான நிறுவனமான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இதை அறிவித்துள்ளது.

முன்னதாக, ஜூன் 14 வரை விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது எமிரேட்ஸ் வலைத்தளத்தின் புதிய புதுப்பிப்பின்படி,  ஜூன் 30 வரை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்கள், கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் பயணம் செய்ய தடை எதுவும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments