அதிரை தமுமுகவின் சிறப்பான ஆம்புலன்ஸ் சேவை - மனம் நெகிழ்ந்த மாற்றுமத சகோதரர்

Editorial
0

அமெரிக்காவிலிருந்து முகநூல் நண்பர் வெங்கட் சுவாமிநாதன்  ஒரு அவசர உதவி என தொடர்புகொண்டார். "சொல்லுங்கண்ணே தாராளமாக செய்யலாம்" என்றேன்.

அதிரைக்கு அருகிலுள்ள உள்ள மதுக்கூரில் அவரின் உறவினர் ஒருவருக்கு அவசரமாக ஆம்புலன்ஸ் தேவை என்று கூறினார்கள். உடனடியாக தமுமுகவை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி அட்ரஸ் கொடுத்தவுடன் ஆம்புலன்ஸ் டிரைவர் தமிழ் அடுத்த அரை மணி நேரத்தில் சிட்டென சீறி பாய்ந்து வாசலில் போய் நின்றார்.

நோயாளியை குறித்த நேரத்தில், குறித்த மருத்துமனையில் சேர்த்த தகவல் அமெரிக்காவில் இருக்கும் நண்பர் சுவாமிநாதனுக்கு தெரிவிக்கபட்டவுடன் என்னை மறுமுறை தொடர்பு கொண்டு சாதி, மதம் பாராமல் ஓடோடி சென்று உதவிய தமுமுகவின் சேவையை பாராட்டியதோடு தமுமுகவுக்கு மனமுவந்து நன்கொடை அளிக்க விருப்படுவதாகவும் நெகிழ்ச்சியோடு கூறினார்கள்.

அதற்கு நான் 'அதிரை தமுமுக ஆம்புலன்ஸ் வாங்கி பல வருடம் ஆகிவிட்டதால் புது ஆம்புலன்ஸ் வாங்க மக்களிடம் நிதி திரட்டும் விஷயத்தை கூறினேன்.' அப்படியா இதோ பணம் அனுப்புகிறேன் என உடனடியாக ரூ.10,000 ரூபாய் அனுப்பியும் விட்டார்கள்.

தான் பெற்ற உதவி பெறுக இவ்வையகமே என்ற நல்ல நோக்கத்தில் நன்கொடை அளித்த நண்பர் வெங்கட் சுவாமிநாதன் அவர்களுக்கு என் நன்றிகள். அதுபோல அவசரம் என்றவுடன் ஓடோடி சென்ற தமுமுக ஆம்புலன்ஸ் டிரைவர் தமிழ் அவர்களுக்கும் என் நன்றிகள்.

ஏழை, எளியோர், இயலாதவர்க்கு 24 மணி நேரமும் தன்னலமில்லாமல் உழைக்கும் அதிரை தமுமுக புதிய ஆம்புலன்ஸ் வாங்க நீங்களும் நன்கொடைகளை வாரி வழங்க வேண்டுகிறேன்.

- அதிரை உபயா

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...