அதிரை பிறை செய்தி எதிரொலி - உடனே களமிறங்கிய பேரூராட்சி

Editorial
0

அதிரை ஈ.சி.ஆர் சாலையிலிருந்து கடற்கரைத் தெரு செல்லும் வழியில் அமைந்துள்ள ஹாஜா நகரின் ஒரு சிறு பாதையில் சில மாதங்களுக்கு முன் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலைக்காக அங்குள்ள கழிவுநீர் வடிகாலை அடைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவத்தனர்.


இதையும் மீறி சாலை அமைக்கப்பட்டதால் லேசான மழைக்கே வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிடுவதாக அப்பகுதியை சேர்ந்து பஷீர் குற்றம்சாட்டுகிறார். இதுகுறித்து பல முறை பேரூராட்சியில் புகாரளித்தும் இதுவரை தீர்வு எட்டவில்லை என அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை மழை பெய்தவுடன் வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. 
இது தொடர்பாக அதிரை பிறையில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், அடுத்த சில நேரத்தில் சம்பவ இடத்துக்கு தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு கால்வாய் அடைப்பை சீரமைத்தனர்.இம்முறை இதுசரிசெய்யப்பட்டாலும், இனிவரக்கூடிய காலங்களிலும் வீட்டிற்குள் மழை நீர் புகுந்துவிடாத வகையில் நிரந்திர தீர்வை பேரூராட்சி காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...