உவைசி வரை... தேர்தல் பிரச்சார களத்தில் எதிரொலிக்கும் அதிரை பிறை கட்டுரை!

Editorial
0அதிராம்பட்டினத்தில் காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை கடந்த 2016 தேர்தலின்போதும், தஞ்சை மாவட்டத்துக்கான தேர்தல் அறிக்கையில் திமுக அளித்திருந்தது. அப்போதும், இந்த தொழிற்சாலையினால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து நமது அதிரை பிறையில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் தற்போதைய திமுகவின் மாவட்டங்களுக்கான தேர்தல் அறிக்கையில்,  மீண்டும் காஸ்டிக் சோடா தொழிற்சாலை திட்டத்தை திமுக குறிப்பிட்டுள்ளது. பலரும் தி.மு.க.வின் முக்கிய தேர்தல் அறிக்கை பற்றி பேசிக்கொண்டிருக்கையில், அதிரை பிறை, நமதூருக்கான வாக்குறுதிகள் என்னென்ன என்பதை ஆராய்ந்தபோது, இதை நாம் படித்து அதிர்ச்சி அடைந்தோம்.

இந்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட காயல்பட்டினத்தின் நிலைகுறித்தும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என எண்ணி இதன் பாதிப்புகள் குறித்து அதிரை பிறையில் "அதிரையர்களை புற்றநோயாளிகளாக்கும் திட்டத்தை அறிவித்த திமுக" என்ற செய்தியின் மூலம் அம்பலப்படுத்தினோம்.

அதிரை பிறையின் இச்செய்தியை வாசித்த அதிரை மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திமுக இதை நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தத் தொடங்கினர். பட்டுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை அவர்களிடமே இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளனர். அவரும் இதில் பாதிப்பு இருப்பதை அறிந்தால் நிச்சயம் நிறைவேற்ற மாட்டோம் என உறுதியளித்ததாக அதிரை தி.மு.க. வை சேர்ந்த நிர்வாகி நம்மிடம் தெரிவித்தார்.

ஆனால், தி.மு.க. தரப்பில் இதுதொடர்பாக எந்த எழுத்துப்பூர்வமான உத்திரவாதமும் அளிக்கவில்லை. இதனிடையே இந்த பிரச்சனையை மற்ற கட்சிகளும் கையில் எடுத்துள்ளன. குறிப்பாக நேற்றைய தினம் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமமுக-எஸ்.டி.பி.ஐ கூட்டணியில் உள்ள ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசதுத்தீன் உவைசி அதிரை பிறையால் அம்பலப்படுத்திய திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள காஸ்டிக் சோடா தொழிற்சாலை குறித்து பேசியுள்ளார். காஸ்டிக் சோடா தொழிற்சாலையால் அதிரையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், இந்த தொழிற்சாலை அதிரைக்கு தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால் திமுக தரப்புக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகள் அறிவிக்கும் திட்டங்களை மட்டும் அப்படியே போடாமல் அதில் உள்ள பாதிப்புகள் குறித்தும் அலசுவதே அதிரை பிறையின் பணி. அதை கடமையாக நாம் செய்து வருகிறோம். அதன் பயனாக நமது செய்தி கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், இதுவெற்றியல்ல. இத்திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என தி.மு.க. தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதே நமக்கான வெற்றியாக அமையும். அதுவரை நம்மால் இயன்ற் அழுத்தங்களை கொடுத்துக்கொண்டே இருப்போம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...