Image courtesy: Newyork Times |
தென்கிழக்கு வங்ககடலில், மத்திய அந்தமானை ஒட்டிய பகுதியில் தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது. இச்சலனம் மியான்மர் நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மியான்மர் நோக்கி நகர்வதால், தமிழகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் வெப்ப அலை வீசும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும். குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இயல்பை விட வெப்ப அதிகரித்து காணப்படும்.
மாவட்டத்தின் பல இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 38 டிகிரி முதல் 41 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும். ஒருசில இடங்களில் 43 டிகிரி செல்ஷியஸ் வரை செல்லும். தெற்கு காற்று வீசுவதால் தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருவாரூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேதாரண்யம், கோடியக்கரை, இராமநாதபுரத்தின் இராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் இருக்காது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஷியசை தாண்டிச்செல்லாது.
பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. தற்போது தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் மேற்கு மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடிமழை பதிவானது. அதுபோல மாலை/இரவு நேரங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை உள் மாவட்டங்களில் பதிவாகும்.
அன்பை விதைப்போம்
டெல்டாவெதர்மேன் & அலையாத்தி செந்தில்