பட்டுக்கோட்டை தொகுதியில் தி.மு.க போட்டியிடுகிறதா?

Editorial
0

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகள் சார்பில் வேட்பாளர் தேர்வு படலம்அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தஞ்சையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பட்டுக்கோட்டைக்கு யார் யார்வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

நேற்றைய தினம் அதிமுக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் பட்டுக்கோட்டை தொகுதி இடம்பெறாததால், அது தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக நேற்று செய்தி வெளியிட்டோம்.

பார்க்க: பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக போட்டியில்லை... மீண்டும் ரங்கராஜனா?

இந்த நிலையில், இன்று திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் பட்டுக்கோட்டை தொகுதி இடம்பெறவில்லை. எனவே, பட்டுக்கோட்டை தொகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு திமுக போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் திமுக சார்பில் பட்டுக்கோட்டை வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏக்கள் கா.அண்ணாதுரை அல்லது ஏனாதி பாலசுப்ரமணியம் ஆகியோரில் ஒருவர் நிறுத்தப்படலாம் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...