பட்டுக்கோட்டையில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டி

Editorial
0தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பட்டுக்கோட்டைக்கு யார் யார்வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

இதனிடையே ஆளும் அதிமுக நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பட்டுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே பட்டுக்கோட்டை தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக நேற்று நமது அதிரை பிறை தளத்தில் பதிவிட்டோம்.

இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் த.மா.கா போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலில் பட்டுக்கோட்டை இடம்பெற்றுள்ளது. எனவே இதற்கு மூன்று முறை பட்டுக்கோட்டை எம்.எல்.ஏவாக இருந்த ரெங்கராஜன் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மீண்டும் நிறுத்தப்படுவாரா அல்லது புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...