அதிரையில் நோன்பு கஞ்சி வழங்கும் பள்ளிவாசல் நிர்வாகங்களின் கவனத்திற்கு

Editorial
0


புனித ரமலான் மாதம் நம்மை நெருங்கிவிட்டது. ரமலான் என்றாலே நோன்பு நோற்பதும், திருக்குர்ஆன் ஓதுவதும், தராவீஹ் மற்றும் இரவு நேர அமல்களும் நினைவுக்கு வரும். அதுபோல், இஃப்தாருக்கு நாம் அனைவராலும் அருந்தப்படும் நோன்புக் கஞ்சியையும் மறந்துவிட முடியாது.

அதிரை பள்ளிவாசல்களில் வழங்கப்படும் சுவையான கறிக்கஞ்சியின் சுவையும், வாசனையும் என்றும் பசுமையாக நம் நினைவில் தங்கக்கூடியவை. நீண்ட நேரமும் வெறும் வயிற்றுடன் இருப்பவர்கள் உடல் சூட்டை தணிக்க இந்த நோன்புக் கஞ்சி பயன்படுகிறது.

இந்த நோன்புக் கஞ்சியை மேலும் சத்துள்ளதாக மாற்ற பள்ளிவாசல் நிர்வாகங்கள், நோன்புக் கஞ்சியில் கால் பங்கு சிறுதானியங்களையும் சேர்க்கலாம். கம்பு, சோளம், ராகி, திணை, வரகு, குதிரை வாலி, சாமை, பனி வரகு ஆகிய சிறுதானியங்களை நோன்புக் கஞ்சியில் சேர்க்கும்போது அது மேலும் சத்துள்ள பானமாக மாறுகிறது.

இதன் மூலம், பாஸ்ட் புட் உணவு முறையால் பாதிக்கப்பட்டுள்ள பலகீனம் அடைந்துள்ள மக்கள் உடல்நலன் வலுவடையும். நோய்களின் தாக்கத்திலிருந்தும், மருத்துவமனை செலவுகளில் இருந்தும் மக்களை காப்பாற்ற இயலும்.

அதுபோல், நோன்புக் கஞ்சியில் சிறுதானியங்களை சேர்க்கும்போது, அதை அருந்தும் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். ஊட்டச்சத்தாகவும் இருக்கும். எனவே பள்ளிவாசல் நிர்வாகங்கள் கஞ்சி காய்ச்சுபவரிடம் சிறுதானியங்களை சேர்க்க அறிவுறுத்துங்கள்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...