பட்டுக்கோட்டையில் தினகரன் கட்சி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மகன்

Editorial
0

 


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பட்டுக்கோட்டைக்கு யார் யார்வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

அந்த வகையில், அதிமுகவிலிருந்து பிரிந்து கட்சி தொடங்கிய டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பட்டுக்கோட்டை வேட்பாளர்    SDS.செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக ஆட்சியில் வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த சோமசுந்தரம் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...