அதிரையில் பாதாள சாக்கடைத் திட்டம் - திமுக தேர்தல் அறிக்கை

Editorial
0தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சையின் முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பட்டுக்கோட்டைக்கு யார் யார்வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என்று மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.

அந்த வகையில் திமுக சார்பில் பட்டுக்கோட்டை வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ கா.அண்ணாதுரை நிறுத்தப்பட்டுள்ளார். இன்று திமுக சார்பில் வெளியான தேர்தல் அறிக்கையில், பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், அதிரை மக்களின் நீண்ட கால கோரிக்கையான பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும் என திமுக உறுதியளித்துள்ளது. அதுபோல், அதிராம்பட்டினத்தில் மீன்பிடித்துறைமுகம் மற்றும் தேங்காய் கொள்முதல் மையம் எனவும் திமுக உறுதியளித்துள்ளது. அதுபோல், காஸ்டிக் சோடா தொழிற்சாலை அமைக்கப்படும் எனவும் திமுக தெரிவித்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...