மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு கார்ப்பரேட்டுகளுடன் கூட்டு சேர்ந்து சாமானிய மக்களிடம் பணம் பறிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.
இதனால், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை அன்றாடம் பயன்படுத்தும் மக்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மத்திய பாஜக அரசின் இந்த அராஜகப் போக்கை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) இன் தொழிற்சங்கமான SDTU சார்பில் அதிரை பேருந்து நிலையத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.