பாபர் மசூதி நிலத்தை திருப்பிக் கொடு... அதிரையில் SDPI நடத்தும் பெருந்திரள் ஆர்ப்ப்பாட்டம்

Editorial
0
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் பைசாபாத்தில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க வழிபாட்டு தலமான பாபர் மசூதியை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., சிவசேனை உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாத கும்பல் தகர்த்தது.

எப்படியாவது நிலத்தை மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கை, இஸ்லாமிய அமைப்புகள் ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு பாபர் மசூதி இருந்த நிலத்தை உரிமையாளர்களான இஸ்லாமியர்களுக்கு வழங்காமல் ராமர் கோவில் கட்டுவதற்காக வழங்கியது.

அதனை தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு, வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி போன்றோரை லக்னோ உயர்நீதிமன்றம் நிரபராதி என அறிவித்தது. இவ்விரண்டு தீர்ப்புகளும் சட்டப்படி நியாயமாக வழங்கப்படவில்லை என சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர்.

வருகிற டிசம்பர் 6ம் தேதியுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றளவும் நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ள இஸ்லாமியர்கள், தங்களுக்கு நீதி திருத்தி எழுதப்படும் என்ற நம்பிக்கையில் டிசம்பர் 6-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ள உள்ளனர்.

அந்த வகையில், அதிராம்பட்டினத்தில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) சார்பில் பேருந்து நிலையத்தில் மாலை 4:30 மணியளவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப்பில் மட்டும் ஸ்டேட்டர் வைத்து விட்டு ஒதுங்கிக் கொள்ளாமல், ஆர்ப்பாட்ட களத்துக்கு சென்று பாபர் மசூதியை அதே இடத்தில் மீட்டெடுக்க களமாடுவோம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர போராடுவோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...