தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அதிரை மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய அம்சங்கள்

Editorial
3

File Image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை தி.மு.க. ஏற்கனவே தொடங்கிவிட்டது. ‘ சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை தயாரிப்பதற்கு தி.மு.க. சார்பில் 8 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், தி.மு.க. நாடாளுமன்ற குழு துணை தலைவர் கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அ.ராமசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அறிக்கை தயாரிப்பதற்கான தஞ்சை மாவட்ட கூட்டம் டிசம்பர் 6ம் தேதி நடைபெற உள்ளது. 

இதில் கலந்துகொள்ளும் அதிரையை சேர்ந்த திமுக நிர்வாகிகளுக்கு அதிரை பிறை பரிந்துரைக்கும் முக்கிய கோரிக்கைகள் இதோ....

  • குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக வலுவான நிலைபாட்டை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
  • முத்தலாக் சட்டம், என்.ஐ.ஏ. மற்றும் யு.ஏ.பி.ஏ. சட்டத்திருத்தத்தை தமிழகத்தில் நிறைவேற்றிட முடியாத அளவுக்கு தமிழக சட்டப்பேரவையில் COUNTER ACT கொண்டு வர வேண்டும்.
  • கோவை சிறை கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
  • கேரளாவை போல் தமிழகத்திலும் சி.பி.ஐ., என்.ஐ.ஏ. போன்ற மத்திய புலனாய்வு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
  • தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மக்கள் தொகை எத்தனை சதவீதம் உள்ளதோ, அத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
  • ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
  • டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் மேற்கொள்ள பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
  • கடந்த முறையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த, அதிரைக்கு கிளோரைட் தொழிற்சாலை கொண்டு வரும் திட்டத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது.
  • இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்பவர்களை தண்டிக்க கடுமையான தனிச்சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
  • தீவிரவாத பழி சுமத்தப்பட்டு விசாரணைக் கைதிகளாகவே சிறையில் அடைப்பட்டு கிடக்கும் இஸ்லாமியர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
  • அதிராம்பட்டினத்தின் அத்தியாவசிய தேவையான 110KV துனை மின் நிலையத்தை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • எப்போதும் தாமதமாக வரும் காவிரி நீரை விரைந்து அதிரைக்கு கொண்டு வர நீர் வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக தூர்வாரி பராமரித்திட வேண்டும்.
  • குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் இசுலாமியர்களுக்கு திமுக வாய்ப்பு மறுத்ததை போல், இந்த தேர்தலில் மறுக்க கூடாது.
  • இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவப்படி குறிப்பிட்ட சதவீதத்திலான சீட்டுக்களை திமுக ஒதுக்க வேண்டும்.
  • கூட்டணியில் இடம் பெறும் இஸ்லாமிய கட்சிகளுக்கு கவுரவமான இடங்களை வழங்கிட வேண்டும்.
  • திமுக ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.
இது போல் ஊர் நலன் சமுதாய நலன் சார்ந்த கோரிக்கைகள் இருந்தால் வாசகர்களாகிய நீங்களும் கீழ்காணும் கமெண்ட் பாக்சில் தெரிவிக்கலாம்.



Post a Comment

3Comments
  1. நல்ல முயற்சி ஆனால் திமுக தலைமையால் இது ஏற்றுக்கொள்ளப்படுமா?
    அதிரை.
    பைசல் அஹமது .

    ReplyDelete
  2. அதிராம்பட்டினத்தின் அத்தியாவசிய தேவையான 110KV துனை மின் நிலையத்தை துரிதமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. சிதரி இருக்கும் இயக்கங்களை ஒன்றினைக்கும் விதமாக கூட்டனியில் இணைத்து வாக்குகள் சிதராமல் பரஸ்பரம் பேனி, முன்பு இல்லாதது போல் அதிக தொகுதியினை வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...