அதிரையில் லேட்... பட்டுக்கோட்டை போனால் வேஸ்ட்!

Editorial
0
தொய்வடைந்து நிற்கும் தபால் துறையை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்வதாக அரசும், தபால் துறையும் கூறிக் கொண்டாலும், ஊழியர்கள் மற்றும் நவீன வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படாததால் மக்கள் அதை பயன்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.

அதிரை தபால் நிலையத்தில் ஸ்பீடு போஸ்ட் மூலம் ஒரு பார்சல் அனுப்ப சென்றால், இங்கு தாமதமாகும் பட்டுக்கோட்டை தபால் நிலையம் சென்று போஸ்ட் செய்யுங்கள் என்று ஊழியர்கள் கூறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பட்டுக்கோட்டைக்கு சென்றால், 30 கிலோ எடை வரை பார்சல் அனுப்ப அனுமதி இருந்தும், தபால் அலுவலக ஊழியர்கள் மறுப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பட்டுக்கோட்டை தபால் நிலையத்தில் தமக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து அதிரை நபர் கடிதம் மூலம் புகாரளித்துள்ளார்.

அதில், 30 கிலோ அனுப்ப அனுமதி இருந்தும் தபால் அலுவலக ஊழியர்கள் ஏற்க மறுத்ததாகவும், எடைக்கருவி இல்லை என்று கூறி பார்சலை பிரிக்க சொன்னதாகவும், மூன்றரை மணி நேரம் காத்திருக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை தபால் நிலையம் இந்த சிக்கல்களை களைவதோடு மட்டுமின்றி, அதிராம்பட்டினம் தபால் நிலையத்தில் ஸ்பீடு போஸ்ட் செய்தால் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சென்றடைய வைக்க வழிவகை செய்ய வேண்டும்.

பட்டுக்கோட்டைக்கு சென்று தான் ஸ்பீடு போஸ்ட் செய்ய வேண்டுமெனில் அதிரையில் தபால் நிலையம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பின் அதை களைய வேண்டியது தபால் துறையின் கடமை. அதைவிடுத்து, மக்களை அலைக்கழிப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...