அதிரையில் ரூ.50 லட்சம் மதிப்பில் நடைபெற்ற சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்ததாக புகார்

Editorial
0
அதிராம்பட்டினம்  மேலத்தெரு மேல வடபுறம், மேல கீழ்புறம் மற்றும் மேல தென்புற கீழ்பக்கம் தார்ச்சாலை அமைக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் விடப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. 

ஆனால் சாலை அமைத்த இரண்டு மாதத்தில் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. இது குறித்து SDPI கட்சியினர், அக்கட்சியின் அதிரை நகர தலைவர் S. அஹமது அஸ்லம் தலைமையில் 
பேருராட்சி செயல் அலுவலரை சந்தித்து புகாரளித்துள்ளனர்.

அதில், 'சாலை அமைப்பதில்  சட்டத்திற்குப் புறம்பாகவும், முறைகேடு செய்தும் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. 
சாலையை மறு ஆய்வு செய்து மீண்டும் தரமான சாலை அமைக்க வேண்டும். மேலும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...