தமிழ்நாட்டுக்கே வழிகாட்டும் அதிரை... வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்த்து மக்கள் நடத்தும் பேரணி

மக்களவைத் தேர்தலோ, சட்டப் பேரவைத் தேர்தல்களோ நடைபெறும் போதெல்லாம் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள், வேட்பாளர்களின் தகுதிகள் போன்றவை கேள்விக்கு உள்ளாவதைப் போலவே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 

முக்கியமாக தேர்தல்களில் தோல்வியுறும் கட்சிகள், வாக்கு இயந்திரங்களில் ஏற்படும் தில்லுமுல்லுகள்தான் தோல்விக்குக் காரணம் என்று குற்றம்சாட்டுகின்றன. இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களிலும், அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வாக்கு இயந்திரங்கள் பயன்பட்டு வந்தபோதிலும் இத்தகைய பேச்சுக்கள் இன்றும் தொடர்ந்து எழுகின்றன.

2009 தேர்தலில் காங்கிரசிடம் தோல்வியடைந்த பா.ஜ.க. வாக்குப்பதிவு இயந்திரம் மீது பழிபோட்டது. பாஜக 2014, 2019 தேர்தலில் வெற்றிபெற்றபோது வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து அக்கட்சி மோசடி செய்து விட்டதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டினர். ஆம் ஆத்மி கட்சி மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபித்தும் காட்டியது.

ஆனால், இப்போது அதே பாஜக வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆதரிக்கிறது. தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக மோசடி செய்து ஆட்சிக்கு வர முயற்சிப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். எனவே வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிரையில் வரும் 11-12-2020 அன்று மாபெரும் கோரிக்கை முழக்க பேரணி நடைபெற உள்ளது. மாலை 4:30 மணியளவில் தக்வா பள்ளி அருகே தொடங்கும் இப்பேரணி பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைய உள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியுள்ள நிலையில், மக்களாக முன்னெடுக்கும் முதல் போராட்டம் இது. இதில் அதிரை தமிழகத்துக்கே முன்மாதிரியாக அமையட்டும்.

Post a Comment

0 Comments