அதிரையில் 24 மணி நேரத்தில் 98.5 மி.மீ. கொட்டிய மழை

டிசம்பர் 3, காலை 6 மணியளவில் புரவி புயல் வட மேற்கு இலங்கையின் மன்னாருக்கும் -  யாழ்பானத்திற்கும் இடையே பாக் ஜலசந்தி கடல் பரப்பில் நிலைக் கொண்டுள்ளது.

இந்த புயலின் வெளிச்சுற்று தமிழகத்தின் ராமேஸ்வரம், அதிராம்பட்டினம், வேதாரண்யம் போன்ற பகுதிகளை உரசுவதால் கனமழை பதிவாகி வருகிறது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று டிசம்பர் 3, காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 98.5 மிமீ (9.85 செமீ)  மழை பதிவாகியுள்ளது.
- முகைதீன் அப்துல் காதர்

Post a Comment

0 Comments