அதிரை அருகே கடல்போல் காட்சியளிக்கும் மஞ்சக்குடி ஏரி

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மழவேனிற்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுவிக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது மஞ்சக்குடி ஏரி. நடுவிக்காடு மற்றும் அதன் தாய்கிராமங்களின் மிக பெரிய பரப்பளவைக்கொண்ட ஏரியாக இது உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக  மஞ்சுக்குடி ஏரியில் நீர் நிரம்பாத நிலையில், தற்பொழுது  முழுவதுமாக நிரம்பியதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மஞ்சக்குடி ஏரி நீர் பாசனத்தை நம்பி சுமார் 150 ஏக்கர் நிலபரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மஞ்சக்குடி ஏரியில் சம்பா, தாளடி, குருவை சாகுபடிக்கு தேவையான நீரை சேமிக்கமுடியும். நிலத்தடி நீரையும் பாதுகாக்க முடியும். 

இந்த ஏரி நிறைந்தால் வாய்க்கால் வழியாக அதிரை குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments