தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக அதிரையில் 40 மி.மீ கொட்டித்தீர்த்த கனமழை

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலஙகையில் கரையை கடந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கரையோர மாவட்டஙகளில் இன்று பலத்த மழை பெய்தது. குறிப்பாக தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்று காலை 8:30 மணி முதல் இரவு 9:30 வரை அதிரையில் 40 மி.மீ மழை பொழிந்துள்ளது.

தமிழகத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில் அதிரையே முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments