அதிரை மக்களை அசர வைத்த மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி..!

Editorial
0
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது. இருப்பினும் இந்திய மெயின் கிரிக்கெட் அணிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இதற்கு வழங்கப்படாததால் போதிய நிதி வருவாய் இன்றி முக்கிய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், துபாயில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் தொடரில் இவர்கள் பங்கேற்பதற்காக நிதி திரட்டும் வகையில், அதிரைக்கு வந்தனர். 

இன்று மதியம் அதிரை மேலத்தெரு கருத்தம்மா WCC மைதானத்தில் WCC அணியுடன் நட்பு கிரிக்கெட் போட்டியில் விளையாடினர். இதில் இந்திய அணியில் விளையாடும் 3 மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்றனர். இப்போட்டியில் மாற்றுத்திறனாளிகள் அணி பேட்டிங் செய்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது. மாற்றுத்திறனாளிகள் அணியினரின் ஆட்டம்  அதிரை ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...