அதிரைக்கு வரும் தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்று வருகிறது. இருப்பினும் இந்திய மெயின் கிரிக்கெட் அணிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இதற்கு வழங்கப்படாததால் போதிய நிதி வருவாய் இன்றி முக்கிய போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் இவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், துபாயில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் தொடரில் இவர்கள் பங்கேற்பதற்காக நிதி திரட்டும் வகையில், அதிரைக்கு வர உள்ளனர். 

இவர்கள் நாளை மதியம் அதிரை WSC அணியுடன் நட்பு கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளனர். இதில் இந்திய அணியில் விளையாடும் 3 மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்க உள்ளனர். இப்போட்டி அதிரை மேலத்தெரு கருத்தம்மா மைதானத்தில் நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments